தீவிரவாத தாக்குதல்: உலக அளவில் இந்தியாவுக்கு 4ம் இடம்!
டெல்லி: தீவிரவாதிகளின் தாக்குதல் இந்தியாவில் அடிக்கடி நிகழ்கிறது. தாக்குதலை தடுக்க எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் ஏதாவது ஒரு நகரத்தில் தாக்குதல் நடைபெறுவதும், பலநூறு உயிர்கள் பலியாவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
காஷ்மீரோ, கோவை மாநகரமோ குண்டு வெடிப்புகளுக்கு இலக்காகிக் கொண்டுதான் இருக்கிறது. பாராளுமன்றத்தின் உள்ளேயே கூட தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடைபெறும் அளவிற்கு நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் உள்நாட்டு கலவரம், பிரிவினைவாத மோதல், தீவிரவாதிகள் தாக்குதல் என தொடர்ந்து நடந்துகொண்டேதான் உள்ளன. அதிலும் இது போன்ற தீவிரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவை தெற்கு ஆசிய நாடுகள்தான் என்கின்றன ஒரு கணக்கெடுப்பு.

இந்தியாவிற்கு 4 வது இடம்
உலக அளவில், ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து இந்தியாவில்தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நிகழ்வதாக சர்வதேச தீவிரவாத புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

20 ஆண்டுகளில் பலி எண்ணிக்கை
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு நடந்த பல பெரிய தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 1300 பேர் இந்தியாவில் கொல்லப் பட்டுள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு
20 ஆண்டுகளுக்கு முன் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டவர்கள் இன்னமும் சிக்காமல் பாதுகாப்பாக உள்ளனர்.

விழித்துக்கொண்ட அமெரிக்கா
அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தனர். இந்த ஒரே சம்பவத்திலேயே 2823 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு எந்த தீவிரவாத சம்பவமும் நிகழவில்லை.

ரஷ்யாவில் தாக்குதல்
2004ம் ஆண்டில் ரஷ்யாவின் பெஸ்லான் பகுதியில் ஒரு பள்ளிக்குள் நுழைந்த செசன்ய தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்தனர். 3 நாட்களுக்குப் பிறகு பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள் தாக்குதல் நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த தாக்குதலில் 186 குழந்தைகள் உள்ளிட்ட 340 பேர் இதில் இறந்தனர்.

இந்தோனேசியாவில் தாக்குதல்
2002ம் ஆண்டில் இந்தோனேஷியாவின் பாலி நகரில் இரவு விடுதி மீது தீவிரவாதிகள் தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் நம்பர் 1
உலகிலேயே தீவிரவாதத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு ஈராக்தான். அங்கு 2011ம் ஆண்டில் மட்டும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் 1800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

2011 தீவிரவாத தாக்குதல்
2011ம் ஆண்டில் பாகிஸ்தானில் 1468 பேரும், ஆப்கானிஸ்தானில் 1293 பேரும், இந்தியாவில் 402 பேரும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் இறந்துள்ளனர்.

தீவிரவாத திட்டம்
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த தீவிரவாத தாக்குதலை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் பணத்திற்கு ஆசைப்பட்டு உள்ளூரில் இருக்கும் மக்களே தீவிரவாதிகளுக்கு கைக் கூலிகளாக செயல்படுகின்றனர். இதுபோன்ற புல்லுருவிகள் இருக்கும் வரை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications