தமிழக பட்ஜெட் தாக்கல் எப்போது?... மார்ச் 15 என தகவல்!
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மத்திய அரசின் பொது பட்ஜெட் 28ம் தேதி தாக்கலாகிறது. இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதம் மத்தியில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
மார்ச் மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு சட்டசபையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது அவசியமாகும். அதன் பிறகு துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது ஒரு மாத காலத்துக்கு மேல் விவாதம் நடைபெறும்.
ஒவ்வொரு நிதியாண்டும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது, மார்ச் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 15-ம் தேதியன்று தாக்கல் செய்வார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்புத் திட்டங்களான மாணவர்களுக்கான விலையில்லா லேப்-டாப், பெண்களுக்கான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றைக் கூடுதலாக கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில் 25 லட்சம் விலையில்லாத மிக்ஸி, கிரைண்டர், பேன் வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான இலக்கு எட்டப்பட்டு வருகிறது.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 18-ல் தொடங்கி ஒரு வாரம் நடைபெறும் எனத் தெரிகிறது. இதன்பின், ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதியை ஒதுக்க வகை செய்யும் மானியக் கோரிக்கைகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு அவற்றின் மீது விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்படும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications