இன்று பட்ஜெட் தாக்கல்: ரொம்ப எதிர்பார்க்கிறோம் சிதம்பரம் சார்!

மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் சலுகைகளுடன் கூடிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
விவசாயிகள், ஏழைகள், நடுத்தர மக்களைக் கவரும் வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
நடுத்தர மக்களை மகிழ்விக்கும் வகையில் வருமான வரி வரம்பு அதிகரிக்கப்படலாம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் நிச்சயமாக வரி உயர்வுகள் இருக்காது. அதே நேரத்தில் வரி உயர்வு இல்லாவிட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். இதை சமாளிக்க வேண்டிய சவாலும் ப.சிதம்பரத்துக்கு இருக்கிறது.
இதனால் முடிந்தவரை அரசின் வீண் செலவுகளைக் குறைக்கும் அறிவிப்புகளை சிதம்பரம் வெளியிடக்கூடும். மக்கள் வங்கிகளில் பணத்தை சேமிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் அவரது பட்ஜெட் இருக்கலாம். அதற்கேற்ற வட்டி விகித மாற்றங்கள் இருக்கும்.
அதே நேரத்தில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கச் செய்யும் வகையில் அதன் மீதான வரி இன்னும் உயர்த்தப்படவும் வாய்ப்புண்டு.
அவர் 3 முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.
1. தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் மானியங்களுடன் கூடிய புதிய அறிவுப்புகள் வெளியாகலாம். ஊரக வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டங்கள், விவசாயிகளுக்கான சலுகைகள் அறிவிக்கப்படலாம். நடுத்தர மக்களை கவர வருமான வரியை கொஞ்சம் குறைக்கலாம்.
2. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்கள் இருக்கலாம். நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் அறிவிப்புகள் இருக்கும்.
3. பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகலாம்.
சிதம்பரம் திறமைக்கும் முன்யோசனைக்கும் பெயர் போனவர். இதுவரை அவரது எல்லா பட்ஜெட்களுமே பெரும்பாலானோரால் வரவேற்கப்பட்டே வந்துள்ளன. இந்த முறையும் நாட்டின் பொருளாதாரத்தை காப்பதோடு, மக்கள் மீதும் சுமையை ஏற்றாமல் தனது திறமையைக் காட்ட வாய்ப்புண்டு.
ரொம்ப எதிர்பார்க்கிறோம் சிதம்பரம் சார்!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications