4 ஆண்டுகளில் 400 கோடி வாடிக்கையாளர்கள்… 970 கோடி இணைப்புகள்

தற்போது உலகில் 320 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரே வாடிக்கையாளர் அல்லது ஒரே நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் இணைப்புகளை பெறுவது அதிகரித்து வருகிறது.
இதனால் அடுத்த சில ஆண்டுகளில் உலக மக்கள் தொகைக்கு இணையாக அல்லது அதற்கும் அதிகமான அளவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் 2017-ஆம் ஆண்டில் மொத்தம் 970 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கும் என தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதே போன்று வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் 80 கோடி அதிகரித்து 400 கோடியாக உயர்ந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டு நிலவரப்படி சர்வதேச அளவில் வழங்கப்பட்டுள்ள செல்போன் சேவை இணைப்புகளின் எண்ணிக்கை 680 கோடியாகும்.
4 சதவிகித வளர்ச்சி
உலக அளவில் ஒட்டுமொத்தத்தில் செல்போன் சேவை நிறுவனங்களின் வருவாய் 2008 முதல் 2012 வரையிலான காலத்தில் 4 சதவீதம் வளர்ச்சி கண்டு வந்தது. எனினும், 2017 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதம் 2.3 சதவீத அளவிற்கே இருக்கும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
ஒரு லட்சம் கோடி டாலர்
கடந்த 2012-ஆம் ஆண்டில் உலக செல்போன் சேவை நிறுவனங்களின் வருவாய் ஒரு லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளதாக தெரிகிறது. இது, உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 1.4 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளை கொண்ட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வருவாய் அடிப்படையில் அதிகபட்ச வளர்ச்சி இருக்கும் என்று கருதப்படுகிறது. இப்பகுதியில் நிறுவனங்களின் வருவாய், 2012 முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரிக்கும் என்றும், தற்போதைய வருவாயை விட 23 சதவீதம் அதிகரித்து 43,000 கோடி டாலரை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications