காவிரி விவகாரம்: ஜெயலலிதாவை கருணாநிதி பாராட்ட வேண்டும்- 'திமுக' அரங்கநாயகம் அறிவுரை
சென்னை: காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு இடையே அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவதாக திமுக தேர்தல் பணிக் குழு உறுப்பினர் அரங்கநாயகம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். இவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது இவர் திமுக தேர்தல் பணிக் குழு உறுப்பினராக உள்ளார். மேலும், திராவிட எழுச்சிப் பேரவை என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சாமிநாதன், ராஜா முகமது இணைந்து காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது,
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. இதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு எதிராக பெரும் சட்டப் போராட்டம் நடத்தினார். கர்நாடகாவில் நிலவும் தேர்தல் அரசியலுக்கு, காவிரி பிரச்சனையை அம்மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
இருந்தும், உச்ச நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்து தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது. இதற்காக ஜெயலலிதாவை மனம் திறந்து பாராட்ட வேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து திமுக தலைவர் கருணாநிதியும் முதல்வரை பாராட்ட வேண்டும்.
தமிழக பிரச்சனைகளில் திமுக-அதிமுக இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்பட வேண்டும். இதற்கு அரசியல் நாகரிகத்தை இரு கட்சியினரும் பின்பற்ற வேண்டும் என்றனர்.
இந்த பேட்டியின் மூலம் அரங்கநாயகம் அதிமுகவில் இணைய வெளிப்படையாக தூது விட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications