புற்றுநோய்: மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் மனைவி மரணம்
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் மனைவி ஆஷா சிங் இன்று காலமானார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய பிரதேச முதல்வருமான திக்விஜய் சிங்கின் மனைவி ஆஷா சிங்(58). அவர் பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவர் அன்ட் பைலியரி சயன்சஸில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் போதே புற்றுநோய் முற்றிப் போய் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் மரணிக்கும்போது திக்விஜய் சிங் உள்ளிட்ட குடும்பத்தார் அவருடன் இருந்தனர் என்று மூத்த டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஷா அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். அவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications