கோவில் பூச்சாட்டுதலில் நமீதா டான்ஸ் ரத்து... டென்ஷன் ஆன கிராமம்
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கோவில் விழாவில் பிரச்சினை ஏற்பட்டு தள்ளிப் போயிருப்பதால் அதில் இடம் பெறவிருந்த நடிகை நமீதாவின் நடன நிகழ்ச்சியும் ரத்தானது. இதனால் கிராம மக்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.
வாழப்பாடி அருகே சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ்மாதமான மாசியில் திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டு விழாக்காலம் நெருங்கியதால், கோவில் திருவிழாற்கு பூச்சாட்டுதல் நடத்துவதில், இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால்,கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் நேற்று பூச்சாட்டு நிகழ்ச்சி நடத்திட முன்னேற்பாடுகள் நடந்தது. வருகிற மார்ச் 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை திருவிழாவை நடத்திடவும் உத்தேசிக்கப்பட்டது.
விழாவில் நடிகை நமீதாவின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் அடைந்ததால், இரு தரப்பினரையும் அழைத்து வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தங்கராஜ் தலைமையில் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காளியம்மன் கோவில் திருவிழா இந்தாண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரச்சினையை அமைதிக்குழு பேச்சுவார்த்தை வாயிலாக தீர்ப்பதற்காக, சேலம் ஆர்.டி.ஓ.,க்கு போலீஸார் பரிந்துரை செய்தனர். கோவில் திருவிழா பிரச்சனை முடிவுக்கு வராததால் 200 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவந்த மேட்டுப்பட்டி காளியம்மன் திருவிழாவை குறித்த நேரத்தில் நடத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது.
திருவிழா தேதி முடிவாகதாதல், நடிகை நமீதா நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் நமீதாவைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் டென்ஷனாக உள்ளனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications