மாணவியின் பிரா ஹூக்கை கழற்றி விட்ட மாணவர் யூனியன் தலைவர்- ஒரு சர்ச்சை!
லண்டன்: இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழக மாணவர் யூனியன் தலைவர் நிக் ஸ்வெய்ன் ஒரு தர்மசங்கடமான சிக்கலில் மாட்டியுள்ளார். இந்த வாரத்தில் தலைவர் பதவிக்கு மீ்ண்டும் போட்டியிடும் அவர் இப்போது கையைப் பிசைந்தபடி கலங்கிப் போய் நிற்கிறாராம்.
ஒரு பார்ட்டியின்போதுதான் இந்த களேபரம் நடந்து விட்டதாம். பிரா ஹூக்கை கழற்றியதோடு நில்லாமல், அவரது சகாக்கள் பலர் மற்றவர்களின் பேன்ட், டிரவுசர்களைக் கழற்றி விட்டும் கலாட்டா செய்ததால் அதுவும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் நடந்த யூனியன் தேர்தலில் வெற்றி பெற்றவர்தான் நிக். அப்போது பெரும் வாக்கு வித்தியாசத்தில் அவர் வென்றிருந்தார். இந்த வருட தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். இந்தநிலையில்தான் அவருக்கு பிரா ஹூக் ரூபத்தில் செக் வைத்துள்ளனர்.
22 வயதாகும் நிக், சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக பார்ட்டியில் கலந்து கொண்டார். அவரது சகாக்களும் கலந்து கொண்டனர். அவர்கள் ஹிட்லர் டைப் மீசையுடன் வந்திருந்தனர். அனைவரும் பார்ட்டியில் அடித்த லூட்டிதான் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நிக், கூட்டத்துக்குள் ஊடுறுவி ஒரு மாணவியின் பிரா ஹூக்கை நைஸாக கழற்றி விட்டு கலாட்டா செய்வதாக ஒரு காட்சி வெளியாகி டென்ஷனைக் கிளப்பி விட்டுள்ளது.அதேபோல அவரது நண்பர்கள், மற்றவர்களின் டிரவுசர், பேன்ட்டைக் கழற்றி விட்டு கலாட்டா செய்துள்ளனர்.
நிக்கின் செயலால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தனது பிராவைப் பிடிக்க கடுமையாக போராடுவதாக அந்தக் காட்சியில் உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகிவிட்டது. பலரும் அதைப் பார்த்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications