ஜேபிசி முன் சாட்சியம் அளிக்க அழைக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம்: ஆ. ராசா மிரட்டல்

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ. ராசா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அவர் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு முன்பாக ஆஜராகி சாட்சியம் அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
அண்மையில் இந்த கூட்டுக்குழுவின் முன், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், தற்போது அட்டர்னி ஜெனரலாகவும் உள்ள வாஹன்வதி ஆஜராகி, 2ஜி தொடர்பான ஒரு பத்திரிகை செய்தி குறிப்பில் இருந்த அறிக்கையின் ஒரு பாராவை ஆ.ராசா நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வேறு பேனாவால் சில வரிகளை எழுதியிருக்கிறார். இதன் மூலம் அவருடைய செயலுக்கு நான் உடன்பட்டது போன்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.இதைத் தொடர்ந்தே தாம் பதிலளிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று ஆ. ராசா கோரி வருகிறார். இது தொடர்பாக சபாநாயகர் மீராகுமாருக்கும் ஒரு கடிதத்தை ஆ. ராசா அனுப்பியிருக்கிறார். இருப்பினும் ஆ.ராசாவுக்கு சாட்சியம் அளிக்க அனுமதி கிடைக்கவில்லை.
இதனிடையே தம்மை சாட்சியம் அளிக்க அனுமதிக்காவிட்டால் பார்லிமென்ட் வளாகத்தில் காந்தி சிலையின் கீழ் உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஆ.ராசா மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications