நரேந்திர மோடி பிரதமராக பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் அருண் ஜெட்லி ஆதரவு!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தேர்தல் வியூகங்களுக்கு அப்பால் நரேந்திர மோடியை தேசிய அரசியலில் முன்னிறுத்துவதுதான் முதன்மையாக பேசப்பட்டிருக்கிறது.
எதிர்வரக் கூடிய சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்க பாஜகவின் 3 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இக் கூட்டத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு மோடியைப் பற்றியதாகத்தான் இருந்தது.
ராஜ்நாத்சிங் பேசுகையில், பாஜக முதல்வர்களிலேயே 3 முறை வெற்றி பெற்றதன் மூலம் நரேந்திரமோடி புதிய சாதனை நிகழ்த்தி உள்ளார். அவருக்கு எதிராக அவதூறு பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் அவருடன் புதிய உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றன என்றார்.
இதேபோல் அருண் ஜெட்லியும் நரேந்திரமோடி பிரதமராக ஆதரவு தெரிவித்து உள்ளார். தேசிய செயற்குழு கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவர்களில் பலர் நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மக்கள் மத்தியில் மோடிக்கு செல்வாக்கு உள்ளது. ஊடகங்கள் அவருக்கு எதிராக செயல்பட்டாலும் இந்திய அரசியலில் பலமிக்க தலைவராக மோடி வலம் வருகிறார் என்றார்.
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடி தலைமையில் எதிர்வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க முடிவு செய்திருப்பதையே அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் சுட்டிக்காட்டி வருகிறது.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications