பிரதமர் மன்மோகன்சிங்கை 'நைட் வாட்ச்மேன்' என்பதா?: மோடியின் பேச்சுக்கு காங். கண்டனம்

டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன்சிங்கை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 'நைட் வாட்ச்மேனாக' நியமித்திருக்கிறது என்றும் சாடியிருந்தார். இதேபோல் நேரு குடும்பத்தின் வாரிசு அரசியலையும் வெளுத்து வாங்கினார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘மோடி பேசிய வார்த்தைகள் தவறானவை, அநாகரிகமானவை. எப்படி பேசுவது என்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவும் பிரதமர் பதவி என்பது மரியாதைக்குரியது. யாரைப்பற்றி பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என தெரிந்து பேச வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தி தொடர்பாளரான ரஷீத் ஆல்வி கருத்து கூறுகையில், எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு மூத்த தலைவரிடமிருந்து இப்படிப்பட்ட விமர்சனம் வந்தது துரதிர்ஷ்டவசமானது. மன்மோகன்சிங், காங்கிரசின் பிரதமர் மட்டுமல்ல, நாட்டின் பிரதமர். அவர் மதிக்கப்படவேண்டும் என்றார் அவர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications