குழந்தை ஜனனியின் காது கேட்க, வாய் பேச உதவுங்கள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சீரங்க கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகள் ஜனனி. காய்ச்சல் என்று வந்து படுத்தாள். அவ்வளவுதான், இன்று, காது கேட்கும் திறனை இழந்து படிப்படியாக பேச்சுத் திறனையும் இழந்து தவிக்கிறாள். ஜனனியின் நிலையால் அவளின் பெற்றோருக்கு மட்டுமல்ல அருகில் உள்ளவர்களையும் சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.
முத்துவேல்- மணிமேகலையின் தம்பதியரின் மகள்தான் ஜனனி. 5 வயதுவரை துறு துறு என்று ஓடியாடிக் கொண்டிருந்த ஜனனி, 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் காய்ச்சல் என்று சுருண்டு படுத்தாள்.
வைரஸ் காய்ச்சல் என்று கருதி மருந்து கொடுத்தார்கள். மருத்துவமனைகளுக்கு சென்றும் உடல்நிலை சரியாகவும் இல்லை.
இந்த நிலையில், செவித்திறன் கேட்காமல் போகவே, எம்.சி.வேலுச்சாமி மெமோரியல் செவித்திறன் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்யவே, காக்லியர் இம்ப்ளான்டேஷன் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் ஆபரேசன் செய்ய 7 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூற, பதறிப் போயினர் பெற்றோர். உடனடியாக ஆபரேசன் செய்யவில்லை எனில், காது கேட்கும் திறனோடு வாய் பேசும் திறனும் முற்றிலும் குறைந்து போகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கவே உதவி கேட்டு உறவினர்களிடமும், நண்பர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
முத்துவேல் பாடி பில்டர் என்பதல் நிகழ்ச்சிகள் நடத்தி ஓரளவிற்கு பணம் சேகரித்துள்ளார். இதுவரை நிதியாக ரூ. 4.25 லட்சம் ரூபாய் சேர்ந்திருக்கிறது. இதனை வைத்து ஜனனியின் ஆபரேசன் இன்று (மார்ச் 4) வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.
இனி பத்து நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும். மருந்து மாத்திரை என பல்வேறு செலவுகள் இருக்கின்றன. தவிர 6 மாத காலம் ஸ்பீச் தெரபி எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்கு தனி மருத்துவ செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே ஜனனி செவித்திறன் கேட்கவும், வாய் பேசவும் நல்ல உள்ளங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் ஜனனியின் பெற்றோர்.
உதவுங்களேன் ஜனனிக்கு...
தொடர்புக்கு முத்துவேல்
செல்போன்: 95783-91883
S.MUTHUVEL.
STATE BANK OF INDIA,
A/C NO 30820263736
SBIN 0009314
VEERAPANDI BRANCH,
TIRUPUR.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications