பிரணாப் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து 50 அடி தூரத்தில் வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு!

Subscribe to Oneindia Tamil

Pranab Mukherjee
டாக்கா: வங்கதேசம் சென்றுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டாக்காவில் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து 50 அடி தொலைவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக டாக்கா சென்றுள்ளார். தற்போது அங்கு பெரும் வன்முறை வெடித்து பலர் பலியாகி வருகின்றனர்.

டாக்கா சுதந்திரப் போராட்டத்தின் போது போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக ஜமாத்- இ இஸ்லாமி கட்சியின் டெல்வார் உட்பட மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஜமாத் கட்சியின் போராட்டம் வெடித்தனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் டாக்கா சென்ற ஜனாதிபதி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப் பேசினார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கலிதா ஜியாவுடனான சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

தற்போது டாக்காவில் ஜனாதிபதி இருக்கும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே இன்று பிற்பகல் 2 மணியளவில் டாக்காவில் சோனார் கான் பகுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தங்கியிருந்த பான் பசிபிக் ஹோட்டல் அருகே நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் எவருக்கும் காயமேற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல்துறை அதிகாரியான அபூர்வா ஹாசன் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சார்க் கட்டிடத்துக்கு அருகே சோனார்கான் பான் - பசிபிக் ஹோட்டலிலிருந்து 50 அடி தொலைவில் நாட்டி வெடி குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவித்தார்..

ஆனால் ஜனாதிபதியின் செயலாளர் வேணு ராஜாமனி கூறுகையில், சம்பவம் நிகழ்ந்து ஒரு மணி நேரம் கழித்து இது பற்றி எங்களுக்குத் தெரிவித்ததனர். விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாகவும் அவர்கள் கூறினர் என்றார்.

ஆனால் நாட்டிவெடிகுண்டு வெடித்த சப்தம் நாங்கள் யாருக்கும் கேட்கவே இல்லை என்றும் இதுபோன்ற சிறிய ரக நாட்டு வெடிகுண்டுகள் போராட்டத்தின் போது வங்கதேசத்தில் வீசப்படுவது வழக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தங்கியிருக்கும் பகுதியில் சுமூக நிலை நீடிப்பதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் வேணு ராஜாமணி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+