காற்றழுத்தம்: சென்னையில் மோடம்... ஆனால் மழை வராது, கடலோரங்களில் மழை பெய்யலாமாம்
Subscribe to Oneindia Tamil

இலங்கை அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், இலங்கைக்கு தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சில நாட்களாக இருந்தது. அது தற்போது இலங்கைக்கு தென்மேற்கில் வங்கக்கடலில் உள்ளது.
இதன்காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும்.இன்று சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை. நாளை சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் ரமணன்.












Click it and Unblock the Notifications