மதுரைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
மதுரை: மதுரை மாநகருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் சம்பவம் நடத்திய தீவிரவாதிகள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இது தவிர ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை தவிர மும்பை, ஹைதராபாத், நாக்பூர், டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹைதராபாத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் குண்டு வெடிப்பு நிகழலாம் என உளவுத்துறை தகவல்கள் கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications