10ம் வகுப்பு தனித் தேர்வு: தட்கல் முறையில் இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தனித்தேர்வாக எழுதும் மாணவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் திட்டத்தில் மார்ச் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி ஆகிய இரு தினத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வு எழுத முடியும். இதர பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத வேண்டும்.
விண்ணப்பித்த மாணவர்கள், தேர்வுத்துறை அரசுத் தேர்வுகள் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications