ஃபேஸ்புக்கின் மவுசு குறைகிறதா?... அதிரடி ஆய்வு
வாஷிங்டன்: இன்னைக்கு கரண்டு இருக்கு என்பது தொடங்கி... வண்டி ரிப்பேர்... வீட்டு குழாய்ல தண்ணி வரலையே என்பது வரை ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது நம்ம ஆட்களின் வேலை.
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், கடந்த சில வருடங்களில் உலகளவில் ஏராளமான ஆதரவாளர்களை பெற்று அசுர வளர்ச்சியை அடைந்தது. அந்த நிலை இப்போது படிப்படியாக குறைந்து ஃபேஸ்புக் தனது இளைய தலைமுறை இணைய ஆர்வலர்களை இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சலிப்பு தட்டிருச்சோ
ஃபேஸ்புக் மூலம் ஸ்டேட்டஸ் போடுவது மட்டுமல்லாது சாட்டிங், நண்பர் பட்டாளம் என பல அம்சங்களை பெற முடிந்தது. வழங்கியது. ஆனால் இப்போது ஃபேஸ்புக்கின் செயல்பாடுகள் அதன் பயனீட்டாளர்களுக்கு சலிப்பு தட்டிவிட்டது.

புதுசு கண்ணா புதுசு
ஃபேஸ்புக் தனது இளைய தலைமுறை ஆதரவாளர்களை டம்ளர், ஸ்னேப் சேட், இன்ஸ்டாகிராம் போன்ற பிற சமூக தளங்களிடம் இழந்து வருவதாக வாஷிங்டனில் உள்ள வர்ஜ் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிர்வதை பாதுகாப்பது முக்கியம்
சில வருடங்களுக்கு முன் இணையத்தில் பிறந்த நாள், பிடித்த உணவு, புகைப்படங்களை வெளியிடுவது ஃபேஷனாக இருந்து, ஆனால் இப்போது எல்லாவற்றையும் மறைத்து காப்பதே ட்ரெண்ட் என வர்ஜ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ட்ரெண்டை நோக்குவதில் ஃபேஸ்புக் பின்தங்கிவிட்டதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

டீன் டிக்கெட்டுகள் மாறுகின்றனர்
ஆய்வின் படி டம்ளர் ஏற்கனவே ஃபேஸ்புக் ஆதரவாளர்களை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக 13-25 வயதிலான ஆதரவாளர்களை ஃபேஸ்புக் இழந்து விட்டதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications