10 கோடி தமிழர்களின் உணர்வுகளை இந்தியா மதிக்க வேண்டும்- கணேசமூர்த்தி எம்.பி

இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பேசிய கணேசமூர்த்தி கூறியதாவது:
இலங்கையில் தமிழர்கள் இனம் திட்டமிட்டு காலம் காலமாக அழிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. சாலமன் பண்டாரநாயகே காலத்தில் இருந்தே இனப்படுகொலை தொடங்கிவிட்டது.
ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்கவேண்டும் என்ற அடிப்படையில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தமிழகர்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டனர். அன்று தொடங்கிய இனப்படுகொலை ராஜபக்சே காலம் வரை தொடர்கிறது.
இந்த பிரச்சினைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாகமுடியும். இலங்கை அண்டை நாடு என்ற அடிப்படையில்தான் இந்தியா இந்த பிரச்சினையை பார்க்கிறதே தவிர தமிழ்நாட்டில் உள்ள 10 கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாமா?.
ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தருவதற்கு இந்தியா என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?.
உலகத்தில் அதிகமாக இந்துக்கள் வாழும் நாடு இந்தியா. இலங்கையில் இந்துக் கோவில்களும், இந்துக்களும் அழிக்கப்படுகின்றனரே அந்த வகையிலாவது தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்துக்களையும், தமிழர்களையும் காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கே உள்ளது.
இலங்கைப் பிரச்சினையில் ஐ.நா. வே தவறு செய்வதாக சொன்னால் யாரிடம் சென்று முறையிடுவது; ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தினால் யாதொரு பயனும் இருக்கப் போவதில்லை அதற்குப் பதிலாக இந்தியாதான் தீர்மானம் கொண்டு வர வேண்டும்; இலங்கையில் பொது வாக்கெடுப்பு கோர இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளது.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு உலக அரங்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும். அங்கு நடைபெற்ற போர்க்குற்றங்களை சேனல் 4 வெட்டவெளிச்சமாக்கிவிட்டது. எனவே ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான். இவ்வாறு கணேச மூர்த்தி எம்.பி மக்களவையில் பேசினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications