ஜெயலலிதா, ரஜினிகாந்த் இன்னும் ஏன் பேஸ்புக்குக்கு வரலை?
சென்னை: உலகமே இன்று பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் உருண்டு புரண்டு கொண்டிருக்கிறது. ஹேப்பி பர்த்டே மாப்பிள்ளை என்பது முதல் கண் பார்த்தேன் காதல் வந்தது என்று கவிதை பாடுவது வரை பேஸ்புக்கில்தான் அத்தனை பேரும் எல்லாவற்றையும் செய்கிறார்கள்.
சின்னப் பொடுசு முதல் பெரும் பெரும் தலைகள் வரை பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்து அசத்திக் கொண்டிருக்கும்போது முதல்வர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப் பெரிய தலைகளை பேஸ்புக்கம் பக்கம் காண முடியவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி கூட பேஸ்புக்குக்கு வந்து விட்டார். அவரது பேஸ்புக் பக்கத்திற்கு நல்ல வரவேற்பும் காணப்படுகிறது. ஆனால் ஜெயலலிதாவைக் காணவில்லையே...

தமிழகத்தின் முதல் பேஸ்புக் பெரும் தலைவர்
தமிழத்தின் முதல் பேஸ்புக் பெரும் தலைவர் என்று கருணாநிதியைக் கூறலாம். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் முதலில் பேஸ்புக்குக்குள் முகம் காட்டியவர் கருணாநிதிதான்.

ஜெ. பெயரில் ஏகப்பட்ட பேஸ்புக் பக்கங்கள்
ஆனால் முதல்வர் ஜெயலலிதாவை இதுவரை அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் காண முடியவில்லை. இருப்பினும் ஜெயலலிதா பெயரில் ஏகப்பட்ட பேஸ்புக் பக்கங்கள் காணப்படுகின்றன. எல்லாமே அவர் மீது பிரியம் கொண்டவர்கள் தொடங்கியதாக தெரிகிறது.

மோடி இருக்கார், நிதீஷ் இருக்கார்
ஜெயலலிதாவின் நண்பரான நரேந்திர மோடிக்குக் கூட பேஸ்புக் கணக்கு உள்ளது. அதேபோல பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் பேஸ்புக்கில் இருக்கிறார். மமதா பானர்ஜியும் கூட பேஸ்புக்கில் உலா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் இருக்கிறார்... ரஜினி எங்கே?
அதேபோல திரையுலகில் இருபெரும் சிகரங்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரில் கமல்ஹாசன் பேஸ்புக்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் ரஜினியைக் காணவில்லை.

விஸ்வரூபம் எடுத்த கமல் பேஸ்புக்
விஸ்வரூபம் விவகாரத்தின்போது கமல்ஹாசனுக்கு வரலாறு காணாத அளவுக்கு ஆன்லைனில் ஆதரவு குவிந்தது. குறிப்பாக பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் எங்கு பார்த்தாலும் கமல்ஹாசன் ஆதரவுக் குரல்கள்தான். கமலின் பேஸ்புக் பக்கத்திற்கும் பெரும் ஆதரவு குவிந்தது.

ரஜினி ஏன் வரவில்லை?
ஆனால் மறுபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கென ஒரு பேஸ்புக் கணக்கை தொடங்காமல் இருக்கிறார். அதேசமயம், அவரது பெயரில் ஏகப்பட்ட பக்கங்களை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
ஜெயலலிதாவும், ரஜினியும் பேஸ்புக் பக்கம் வந்தால் பேஸ்புக் போர் ரொம்பவே களை கட்டும் என்பதில் சந்தேகமில்லை...
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications