புதுவை மீனவர்கள் கண்ணில் மிளகாய்த்தூள் தூவி தாக்கிய இலங்கை கடற்படை
காரைக்கால்: கடலில் மீன்பிடிக்கச் சென்ற புதுவை மீனவர்கள் 4 பேரின் கண்களில் மிளகாய்த்தூள் தூவி அவர்களை தாக்கிவிட்டு, ரூ.15 லட்சம் மதிப்புள்ள கருவிகளை கடலில் வீசியுள்ளது இலங்கை கடற்படை.
புதுவை காரைக்காலைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 2 தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று இரவு கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் இலங்கை கடற்படை அங்கு வந்துள்ளது. மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் காயம் அடைந்தனர்.
இது குறித்து காயம் அடைந்த மீனவர் சந்திரகுமார் கூறுகையில்,
இலங்கை கடற்படையினர் எங்களுடைய ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட கருவிகளை பறித்துக் கொண்டனர்.
எங்கள் வலைகளை நறுக்கிவிட்டனர். ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கருவிகளை இழந்துவிட்டோம். இந்த தாக்குதல் நடந்தபோது ஒரேயொரு மீனவர் மட்டும் படகின் என்ஜினுக்கு அருகில் ஒளிந்து கொண்டதால் தப்பித்தார் என்றார்.
இன்று கரை திரும்பிய அவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் காரைக்காலைச் சேர்ந்த 40 வயது மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications