Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலான பெர்லுஸ்கோனிக்கு ஒரு வருட சிறை... ஆனாலும் ஜெயிலுக்கு போக மாட்டார்!

Subscribe to Oneindia Tamil

ரோம்: சர்ச்சைக்குரிய இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து மிலன் நகர கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

பெர்லுஸ்கோனியும் சர்ச்சையும் கூடப் பிறந்தவர்கள் போல. செக்ஸ் சர்ச்சைகள் பலவற்றில் சிக்கியும் அசையாமல் இருந்து வந்த பெர்லுஸ்கோனி ஒரு வழியாக கடந்த ஆண்டு தனது பதவியிலிருந்து விலகினார்.

இந்த நிலையில் தற்போது அவர் ஒரு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவிக்க்வுள்ளார். அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்த வழக்கில்.

போலீஸ் தகவலை ஒட்டுக் கேட்ட வழக்கு

போலீஸ் தகவலை ஒட்டுக் கேட்ட வழக்கு

போலீஸாரின் தகவல் பரிமாற்றத்தை ஒட்டுக் கேட்டு அதைப் பதிவு செய்து தனக்குச் சொந்தமான பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டார் என்பது பெர்லுஸ்கோனி மீதான புகாராகும்.

ஒரு வருட சிறை

ஒரு வருட சிறை

இந்த வழக்கை விசாரித்த மிலன் கோர்ட், பெர்லுஸ்கோனிக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

5 மாதத்தில் 2வது தீர்ப்பு

5 மாதத்தில் 2வது தீர்ப்பு

இந்த தீர்ப்பு பெர்லுஸ்கோனிக்கு எதிராக கடந்த ஐந்து மாதங்களில் வந்த 2வது தீர்ப்பாகும். இதனால் பெர்லுஸ்கோனியின் கரம் தாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ஜெயிலுக்குப் போக மாட்டார்

ஆனாலும் ஜெயிலுக்குப் போக மாட்டார்

ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதிலும் கூட பெர்லுஸ்கோனிக்கு சிறைக்குப் போகும் வாய்ப்பில்லை. காரணம் அவருக்கு தற்போது 76 வயதாகிறது. இத்தாலி சட்டப்படி ஒருவருக்கு 75 வயது ஆகி விட்டால், 2 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அந்த நபர் சிறைவாசம் அனுபவிக்கத் தேவையில்லை. எனவே பெர்லுஸ்கோனியும் அப்பீல் செய்து தப்பி விடுவார் என்று தெரிகிறது.

எத்தனை எத்தனை புகார்களப்பா!

எத்தனை எத்தனை புகார்களப்பா!

தாத்தா வயதில் உள்ள பெர்லுஸ்கோனி செய்த செக்ஸ் லீலைகள் இத்தாலி மக்களால் மட்டுமல்ல உலக மக்களாலும் கூட மறக்க முடியாதவை. அந்தப் புகார்களிலிருந்து இன்னும் அவர் மீளவில்லை.

2007வாக்கில்...

2007வாக்கில்...

2007ம் ஆண்டு வாக்கில் ஒரு சில்மிஷம் செய்து வீடியோவில் சிக்கினார் பெர்லுஸ்கோனி. அதாவது ஒரு பெண் போலீஸ் அதிகாரி பின்புறம் நின்று கொண்டு கை விரல்களால் சைகை காட்டி கேலி செய்தார்.

மனைவி பிரிந்தார்

மனைவி பிரிந்தார்

தனது அமைச்சரவையில் இருந்த மாரா கர்பக்னா என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகுகிறார் பெர்லுஸ்கோனி என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து பெர்லுஸ்கோனியின் மனைவி வெரோனிகா லாரியோ கணவரை விட்டுப் பிரிந்தார்.

அசிங்கமான பெண்

அசிங்கமான பெண்

இதைத் தொடர்ந்து தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார் பெர்லுஸ்கோனி. ஆனால் அடுத்த வருடமே, அசிங்கமான பெண்மணியை விட்டு தான் விடுதலைப் பெற்றிருப்பதாக கூறினார்.

ரோம் வீட்டில் கார்ல் கேர்ளுடன் ரோமிங்

ரோம் வீட்டில் கார்ல் கேர்ளுடன் ரோமிங்

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது ரோம் வீட்டில் கார்ல் கேர்ள் ஆன டி அட்டாரியோ என்பவருடன் உல்லாசமாக இருந்தார் பெர்லுஸ்கோனி. இதுகுறித்த செய்தி வெளியாகியபோது அதை அவர் மறுக்கவில்லை.

பெண்களுடன் கும்மாளம் போட்ட கதை

பெண்களுடன் கும்மாளம் போட்ட கதை

தொடர்ந்து இப்படி இரவுகளில் பெண்களுடன் பெர்லுஸ்கோனி கழிப்பது புதிதல்ல. மாறாக, நிறையப் பெண்களுடன் அவர் அடிக்கடி லூட்டி அடிப்பார். அவர்களுக்கு பணம், நகை, வீடுகள் கொடுப்பார் என்றும் திடுக்கிடும் செய்திகள் வெளியாகின.

உல்லாசமாக இருந்து விட்டு டாடி என்று அழைத்த மாடல்...

உல்லாசமாக இருந்து விட்டு டாடி என்று அழைத்த மாடல்...

அதேபோல மாடல் அழகி லெடிஸியா நவோமி என்பவருடன் பெர்லுஸ்கோனி இணைத்துப் பேசப்பட்டார். ஆனால் பெர்லுஸ்கோனியை டாடி என்று அழைத்து அதிர வைத்தார் அந்த மாடல் அழகி. ஆனால் இந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட நகை, பணம், பொருள் கொடுத்து பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அசத்தினார் பெர்லுஸ்கோனி.

பெர்லுஸ்கோனியைப் பற்றி இப்படி நிறையப் பேசலாம், நிறைய செய்தி தரலாம்.. !

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+