இந்த மாதிரி 'மண்டை'யுடன் ஸ்கூலுக்கு வரப்படாது... மாணவனை வீட்டுக்கு அனுப்பிய டீச்சர்கள்!

தலைமுடியை ஒழுங்கா வெட்டிட்டு பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க, இல்லாட்டி அனுப்பாதீங்க என்று அந்தப் பையனின் தாத்தாவிடம் அட்வைஸ் செய்தனராம் ஆசிரியர்கள். அதற்கு அவரோ, இத எதுக்கு போய் பஞ்சாயத்து பண்றீங்க என்று கடுப்பாகி கேட்டாராம்... அந்தக் கதையைப் படிங்க.
நம்ம ஊரில் சம்மர் கட் என்பார்களே..அதாவது தலையை கிட்டத்தட்ட மொட்டை ரேஞ்சுக்குக் கொண்டு போய் முடியை குறைத்து வெட்டுவது. அதேபோலத்தான் ராபர்ட் ஹட்சனும் முடி வெட்டினான். ஆனால் தலையின் பக்கவாட்டில் மட்டும் ஒட்ட வெட்டியவன், மேலேயும், பின்பக்கமும் வெட்டவில்லை. மாறாக அப்படியே விட்டு விட்டான்.
க்ளீவ்லேன்டின் ஹார்ட்லீபூல் ஆங்கிலப் பள்ளியில் படித்து வரும் ராபர்ட், இந்த வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் பள்ளிக்கு வந்தான். வகுப்புக்கு வந்த அவனை பார்த்த ஆசிரியர்கள் இதென்ன இப்படி வந்திருக்கே என்று கூறி நிறுத்தினர். பின்னர் அவனை கூப்பிட்டு இங்க பாரப்பா, நாங்க காசு தர்றோம், போய் மறுபடியும் முடியை வெட்டி சரி பண்ணிட்டு வா என்று அட்வைஸ் கூறினர்.
அத்தோடு நில்லாமல், பையனை அவனது வீட்டுக்குக் கூட்டி வந்து வீட்டில் இருந்த அவனது தாத்தாவிடம் ஒப்படைத்தனர். இப்படி ஹேர்ஸ்டைலுடன் பள்ளிக்கு அனுப்பாதீர்கள். நாங்கள் காசு தருகிறோம், சரியாக வெட்டி விட்டு அனுப்பி வையுங்கள் என்றார்களாம்.
அதைக்கேட்டு குழம்பிப் போனார் தாத்தா. அப்படி என்ன எனது பேரன் தப்பு செய்து விட்டான். முடிவெட்டியதைப் போய் பிரச்சினை பண்றீங்களே என்று ஆசிரியர்களிடம் வாக்குவாதம் புரிந்தார்.இருப்பினும் ஆசிரியர்கள் திட்டவட்டமாக கூறி விட்டு பள்ளிக்குப் போய் விட்டனர்.
இந்த விவகாரம் குறித்து ராபர்ட்டின் தாத்தா பிரையன் ஹட்சன் கூறுகையில், படிக்கிறானா இல்லையா என்பது குறித்துத்தான் ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டுமே தவிர இப்படி ஹேர்ஸ்டைல் குறித்தெல்லாமா பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றார் கோபமாக.
மேலும் அவர் கூறுகையில், தலைமுடியை சரியாக வெட்டாவிட்டால் வகுப்புக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் பள்ளிக்கூட விதிமுறைகளில் எப்படி தலைமுடியை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. இதுகுறித்து நான் கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை.
இவன் தலைமுடியை வெட்டியதில் அப்படி என்ன தவறைக் கண்டுவிட்டார்கள் அவர்கள் என்பது தெரியவில்லை என்றார் கோபமாக.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications