வங்கதேச இந்துக்கள் பல அநீதிகளுக்கு ஆளாகி வருகின்றனர்: ராமகோபாலன் வருத்தம்
சென்னை: வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் பல அநீதிகளுக்கு ஆளாவதாக இந்து முன்னணி மாநில நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நமது ஜனாதிபதி வங்காளதேசத்தில் தங்கியிருந்த இடத்திற்கு அருகாமையில் குண்டு வெடித்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. அவரது பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் பல அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும் 1948-ம் ஆண்டு முதல் ஆளாக்கப்படுகிறார்கள். ஆகவே இந்துக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு நமது ஜனாதிபதி வங்காளதேச ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டும் எனவும் இந்து முன்னணி கோருகிறது.
எல்லையோர ஊடுருவலை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை வங்காளதேசம் எடுக்க வேண்டும். ஏனெனில் அதனால் கலவரங்கள் ஏற்படுகின்றன. எல்லைப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பசுக்கள் வங்காளதேசத்திற்கு கடத்தப்படுவதையும் உடனடியாக தடுக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதி தமது பேச்சுவார்த்தையில் அழுத்தமாகக் குறிப்பிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications