8 வயது சிறுமியை பலத்காரம் செயய முயன்ற 3 பொண்டாட்டிக்காரர்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே சிறுமியை பலத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில் அருகே கீழநீலிதநல்லூரை சேர்ந்த சண்முகையா மக்ன் மாரியப்பன். இவர் விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். இவர் 2ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியிடம் என் வீட்டிற்கு வா சாக்லெட் வாங்கி தருகிறேன் என்றார். இதை நம்பி சிறுமியும் மாரியப்பனுடன் வீட்டிற்கு சென்றார். அங்கு சிறுமியை மாரியப்பன் பலத்காரம் செய்ய முயன்றார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்த மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மாரியப்பன் மீது கடத்தல் பெண் வன்கொடுமை தடுபபு சட்டம் மற்றும் பலத்கார முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடினர். ஊருக்கு வெளியே உள்ள ஒரு தோட்டத்தில் மாரியப்பன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்று அவரை மடக்கி பிடித்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் மாரியப்பனுக்கு இரண்டு மனைவிகள் இருப்பதும் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் பிரிந்து தனியாக குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இதனால் மாரியப்பன் அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications