அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கார் விபத்தில் காயம்
Subscribe to Oneindia Tamil
பெருந்துறை: தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் கொம்மகோவில் அருகே வந்தபோது அவருடைய கார் நிலை தடுமாறியது.
இதில் அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்த்து. வலது தோலில் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications