கர்நாடக உள்ளாட்சித் தேர்தல்: மரண அடி வாங்கிய பாஜக; காங் மாபெரும் வெற்றி!

மைசூர், மங்களூர், தாவணகெரெ, பெல்காம், ஹூப்ளி-தார்வாட், பெல்லாரி, குல்பர்கா ஆகிய மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.
பாஜகவுக்கு ஒரே ஒரு இடம்:
இதில், ஹூப்ளி-தார்வாட் தவிர மற்ற 6 இடங்களிலும் பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது.
தாவணகெரே மாநகராட்சியில் மொத்தமுள்ள 41 இடங்களில் காங்கிரஸ் 36 இடங்களை வென்றுள்ளது. பாஜகவுக்கு ஒரே ஒரு இடமே கிடைத்துள்ளது.
பெல்லாரியில் பாஜகவுக்கு சாவு மணி
பெல்லாரியில் மொத்தமுள்ள 35 இடங்களில் 26 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இங்கு ஒரு இடத்தைக் கூட பாஜக வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இருந்து அந்தக் கட்சி வெற்றி பெற உதவிய ரெட்டி சகோதரர்களின் ஏரியாவான இங்கு, பாஜகவுக்கு இப்போது இதுவரை இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு ரெட்டி சகோதரர்களுடன் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஸ்ரீராமுலு உருவாக்கிய தனிக் கட்சியும் மண்ணைக் கவ்வியுள்ளது. அதே நேரத்தில் மாஜி முதல்வர் எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் 7 இடங்களைப் பிடித்துள்ளது. மொத்தத்தில் பெல்லாரியில் பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது.
மைசூரில் பாஜகவை பின் தள்ளிய கெளடா:
மைசூரில் மொத்தமுள்ள 65 இடங்களில் காங்கிரஸ் 22 இடங்களிலும், தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும் வென்றுள்ளன. பாஜக வெறும் 12 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.
எதியூரப்பாவுக்கு ஒன்னு:
பாஜகவிலிருந்து பிரிந்து சென்று அந்தக் கட்சிக்கு ஆப்பு வைத்த எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் இங்கு ஒரே ஒரு இடத்தில் வென்றுள்ளது.
மங்களூர்... பாஜக கோட்டை சரிந்தது:
கர்நாடகத்தில் பாஜக முதன் முதலில் காலூன்றிய இடமான மங்களூரில் அந்தக் கட்சி பெரும் தோல்வி அடைந்துள்ளது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே தொடர் வெற்றிகளைப் பெற்ற பகுதி இது. இங்கு நடந்த மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் வெறும் 20 இடங்களையே அந்தக் கட்சி பிடித்துள்ளது.
காங்கிரஸ் 35 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும் வென்றுள்ளன. எதியூரப்பாவின் லிங்காயத்து சமூகத்தினர் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் அவருக்கு முட்டை தான் கிடைத்துள்ளது.
பெல்காமில் பாஜக-காங்கிரசுக்கு முட்டை:
மகாராஷ்டிராவை ஒட்டிய பெல்காம் மாநகராட்சியில் பாஜக, காங்கிரஸ், கெளடாவின் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அங்கு மகாராஷ்டிர ஏகிகிரண் சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் 34 இடங்களில் வென்றுள்ளனர். மற்ற இடங்கள் அனைத்துமே சுயேச்சைகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹூப்ளி-தார்வாடில் மட்டும் பாஜக ஆறுதல் வெற்றி:
ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சியில் மொத்தமுள்ள 67 இடங்களில் முடிவு தெரிந்த 65 இடங்களில் பாஜக 31 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும், ஜனதா தளம் 9 இடங்களிலும் வென்றுள்ளன.
குல்பர்காவிலும் காங்கிரஸ்:
அதே போல 55 இடங்கள் கொண்ட குல்பர்காவில் காங்கிரஸ் 23 இடங்களிலும் ஜனதா தளம் 10 இடங்களிலும் வென்றுள்ளன. பாஜக வெறும் 7 இடங்களில் தான் வென்றுள்ளது.
318ல் 164 காங் வசம்:
இந்த மாநகராட்சிகளில் மொத்தமுள்ள 318 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 379 இடங்களில் காங்கிரஸ் 164 இடங்களைப் பிடித்துள்ளது. ஆளும் கட்சியான பாஜக 71 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 42 இடங்களையும் பிடித்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எதியூரப்பாவின் கட்சி வெறும் 9 இடங்களைப் பிடித்துள்ளது.
தென்னகத்தில் கர்நாடகத்தில் தான் பாஜக முதன் முதலாக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், முதல்வர் பதவிக்கு நடந்த சண்டை, 3 முதல்வர்கள் மாற்றப்பட்டது, அமைச்சர்கள் பதவிக்கு நடந்த சண்டை, பல அமைச்சர்கள் நீக்கப்பட்டது, கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த சண்டை, பல தலைவர்கள் மாற்றப்பட்டது, மாபெரும் ஊழல்கள், முதல்வர்கள்- அமைச்சர்களின் நில ஆக்கிரமிப்புகள், பல அமைச்சர்கள் மீதான பாலியல் புகார்கள் என மாநிலத்தில் பாஜகவின் பெயர் நாறிவிட்டது.
இந் நிலையில் தான் அடுத்த இரண்டு மாதங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் பாஜக மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரசுக்கு லாட்டரி அடித்துள்ளது.
அதே போல 43 நகராட்சிகள், 63 பேரூராட்சிகள், 92 பஞ்சாயத்துகளுக்கும் நடந்த தேர்தலில் காங்கிரசே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மதசார்பற்ற ஜனதா தளமும், பாஜக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
-
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications