''நான் அவனில்லை'': போலீசாரை கலாய்க்கும் ஜெர்மனி பெண்ணை கற்பழித்த பிட்டி!

ஒரிசா முன்னாள் டிஜிபி பிபி மொஹந்தியின் மகன் பிட்டி மொஹந்தி. அவர் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 26 வயது ஜெர்மனி பெண்ணை ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் வைத்து கற்பழித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பிட்டி உடல் நலம் சரியில்லாத தனது தாயை பார்க்க பரோலில் அதே ஆண்டில் வெளியே வந்தார். பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை 7 ஆண்டுகாலமாக தேடி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் கேரள மாநிலம் கண்ணூரில் கைது செய்யப்பட்டார்.
கேரள போலீசார் பிட்டியிடம் விசாரணை நடத்தியதில், அவர் தன் பெயர் பிட்டி மொஹந்தி என்பதை முதலில் ஒப்புக் கொண்டார். ஆனால் தற்போது தான் ராஜீவ் ரஞ்சன் என்று சாதித்து வருகிறார். இதற்கிடையே ராஜஸ்தான் போலீசார் பிட்டியை அடையாளம் காண இன்று கேரளா வருகின்றனர்.
இது குறித்து ராஜஸ்தான் மாநிலம் லால்கோத்தி காவல் நிலைய போலீஸ் அதிகாரி சம்பத் சிங் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள நபர் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரில் பணியாற்றி வந்துள்ளார் என்று கேரள போலீசார் தெரிவித்தனர். நாங்கள் கேரளாவை அடைந்தவுடன் அவரின் அடையாளத்தை கண்டுபிடிப்போம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications