சொத்து கணக்கு தாக்கல் செய்யாத 1,000 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்: தமிழகத்தை சேர்ந்தவர்கள் 20 பேர்
டெல்லி: நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் சுமார் 1,000 பேர், கடந்த 2012ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை இதுவரை தாக்கல் செய்யவில்லை. இதில் 20 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நாட்டிலேயே மிக அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தான் சொத்துக் கணக்கைக் காட்டவில்லை. இந்த மாநிலத்தைச் சேர்ந்த 147 பேரிடம் இருந்து அசையா சொத்துக் கணக்கு வரவில்லை.
இத் தகவலை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த 58 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த 53 பேரும், பஞ்சாபைச் சேர்ந்த 48 பேரும், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த 47 பேரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 45 பேரும், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 40 பேரும், ஹரியாணாவைச் சேர்ந்த 35 பேரும், ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த 25 பேரும், ராஜஸ்தானைச் சேர்ந்த 22 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரும், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 17 ஐஏஎஸ் அதிகாரிகளும் அசையா சொத்துக்களின் விவரத்தை தாக்கல் செய்யவில்லை.
அதே போல அருணாசல பிரதேசம், கோவா, மிசோரத்தைச் சேர்ந்த 114 அதிகாரிகளும், மணிப்பூர், திரிபுராவைச் சேர்ந்த 100 பேரும், காஷ்மீரில் 96 பேரும், மத்திய பிரதேசத்தில் 88 அதிகாரிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தம் 6,217 ஐஏஎஸ் அதிகாரிகள் பதவிகள் உள்ளன (இதில் 1,339 பேர் ஐஏஎஸ் தேர்வு எழுதாமல் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் அந்தஸ்து பெறுபவர்கள்). இப்போது 4,737 பேர் தான் பதவிகளில் உள்ளனர்.
இவர்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் தங்களது சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது பதவி உயர்களை மறுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications