Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளேபாய்க்கு 'மணிவிழா'... கேட் மோஸின் 'மங்களகரமான' கவர் படத்துடன் வெளியாகிறது!

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: உலகெங்கும் உள்ள ஆண்களின் மனம் கவர்ந்த 'அ' புத்தகமான பிளேபாய் 60வது ஆண்டைத் தொடுகிறது. இதையொட்டி மணிவிழா ஆண்டின் முதல் இதழின் அட்டைப் படத்தில் சூப்பர் மாடல் கேட் மோஸின் படம் இடம் பெறவுள்ளதாம்.

பிளேபாய் பத்திரிக்கையைப் படிக்காத வாலிபப் பசங்களே இருக்க முடியாது. இந்தியாவில் இதற்குத் தடை இருந்தாலும் கூட எல்லா கல்லூரிகளிலும் எப்படியாச்சும் ஒரு காப்பியாவது இந்த நிமிடம் கூட உலா வந்தபடிதான் உள்ளது.

இளமை பூங்காற்றுக்கு வயசு 60

இளமை பூங்காற்றுக்கு வயசு 60

ஆண்களின் மனம் கவர்ந்த பத்திரிக்கையான பிளேபாய், நிர்வாணப் படங்களுக்குப் பெயர் போனது. இந்தப் பத்திரிக்கை வெளியாகி விளையாட்டு போல 60 ஆண்டுகள் ஓடி விட்டன. 2014ம் ஆண்டு பிளேபாய்க்கு மணி விழா ஆண்டாகும்.

மணி விழா அட்டையில் கேட்

மணி விழா அட்டையில் கேட்

60வது ஆண்டையொட்டி 2014ம் ஆண்டு ஜனவரி மாத இதழின் அட்டைப் படத்தில் சூப்பர் மாடல் கேட் மோஸின் படத்தை இடம் பெறச் செய்யவுள்ளனர். இதற்கான போட்டோ ஷூட் விரைவில் லண்டனில் நடைபெறவுள்ளதாம்.

மங்களகரமான படம்

மங்களகரமான படம்

படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் மணிவிழா ஆண்டு என்பதால் நிச்சயம் 'மங்கள'கரமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதுதான் மோசஸுக்கு முதல் போஸ்

இதுதான் மோசஸுக்கு முதல் போஸ்

பிளேபாய்க்காக இதுவரை கேட் மோஸ் போஸ் கொடுத்ததே இல்லை. இப்போதுதான் முதல் முறையாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+