ஒரே நாளில் 90 முறை பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் 16 வயது சிறுமியை ஒரே நாளில் 90 பேர் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அங்குள்ள அமைப்பு குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமூக நீதிக்கான மையம் என்ற தனியார் அமைப்புதான் தனதுஅறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் பெண்கள் குறிப்பாக சிறார்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் பலாத்காரக் கொடுமைகள் பெருமளவில் அதிகரித்து வருவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு உதாரணமாக, இந்த 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கதியை அந்த அமைப்பு எடுத்துக் கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமியை கடத்திச் சென்று அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஒரே நாளில் அந்த சிறுமியை 90 பேர் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர்.

தற்போது அந்த சிறுமி அபாய கட்டத்தில் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் சிறுமி எங்கே இருக்கிறார் என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட்டனரா என்பது குறித்தும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தனக்கு நேர்ந்த கொடுமையின் தாக்கத்திலிருந்து அந்த சிறுமி இன்னும் மீளவில்லையாம். தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த நிலையிலேயே இருக்கிறாராம்.

இந்த அமைப்பு மேலும் கூறுகையில், இங்கிலாந்தில் சிறுமிகளைக் கடத்தி பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. 2011-12ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட சிறுமிகளும், பெண்களும் கடத்தப்பட்டு பாலியல் குற்றத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

சிறுமிகள்தான் பெருமளவில் இந்த பாலியல் குற்றவாளிகளால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் இந்த அமைப்பு கூறுகிறது. அரசுத்தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் சட்டத்தை உறுதியாக பின்பற்றுவதில்லை என்றும் இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

நம் நாட்டிலும் கேரளாவில் சூர்யநெல்லி கிராமத்தில் இப்படித்தான் ஒரு சிறுமியை கடத்தி ஊர் ஊராக கூட்டிச் சென்று பலர் பலாத்காரம் செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம். ஆனால் இந்த சம்பவத்தில் யாருமே தண்டனைக்குள்ளாகவில்லை என்பதுதான் கொடுமையானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+