விஸ்வரூபம் எடுக்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - போலீஸார் அதிர்ச்சி
திருச்சி: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருவதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் , கடந்த வாரம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் போலீசார் அகற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் தற்போது எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சட்டகல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை துவக்கியுள்ளனர்.
மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை. பாலிடெக்னிக், கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் இலங்கை அரசை கண்டித்தும், அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதே போன்று நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் வகுப்புக்களை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்திட கோரியும் கோஷம் எழுப்பினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.
புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள், தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 5 ஆயிரம் பேர், வேலூர் குடியாத்தம் அரசு கல்லூரி மாணவர்கள், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள், நாமக்கல் அறிஞர் அண்ணாத்துரை அரசு கல்லூரி மாணவர்கள், திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள், திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் என பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் தொடர் போராட்டமும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் பிரச்சனை தமிழகம் முழுவதும் வில்வரூபம் எடுத்துள்ளால், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உளவுத்துறை போலீஸார் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மாணவர்கள் மீது தாக்குல் நடத்தினாலோ, கட்டாயப்படுத்தி விலக்கினாலோ அது தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என போலீஸார் போரட்டத்தை அடக்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications