''இலங்கையில் புதைக்கப்பட்ட நீதி''ஆவணப்படம் டெல்லியில் திரையிடப்பட்டது
டெல்லி: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொத்து ...கொத்தாய் ...குண்டுகளை வீசி கொல்லப்படும் காட்சிகள் காண்பவர் உள்ளத்தையும், உடலையும் நடுங்கவைக்கிறது. இந்த கொடூர அரங்கேற்றங்களை உறுதி செய்யும் வண்ணம் தொடர்ந்து எராளமான வீடியோ காட்சிகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் பின்னரான தமிழர்களின் தற்போதைய நிலை குறித்த ‘புதைக்கப்பட்ட நீதி' என்ற புதிய ஆவணப்படம் ஒன்று தலைநகர் டெல்லியில் இருதினங்களுக்கு முன்பு திரையிடப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 50 ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து "சேவ் த டமில்ஸ்' (தமிழர்களைக் காப்பாற்றுங்கள்) என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.

புதைக்கப்பட்ட நீதி
இவர்கள் சார்பில் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான மொஹூயா சௌத்ரி என்பவரால் தயாரிக்கப்பட்ட "இலங்கையில் புதைக்கப்பட்ட நீதி' என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்த ஆவணபடத்தை இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போதும் போருக்கு பிந்தைய நிலையிலும் நடைபெற்ற நிகழ்வுகள் மிகவும் துணிச்சலாக ஒளிவு மறைவற்ற முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

15 நிமிட ஆவணப்படம்
சுமார் 15.நிமிடம் ஓடும் இந்த ஆவண படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் .....மனதை ....உலுக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த ஆவணப்படம் ஜி டிவி எஸ்.பி.வி சேனலில் புதன்கிழமை ஒளிபரப்பானது. இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல் காரணமாக இங்கு பலியாகிய மக்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது என்கிறார் ஒரு பெண்.

பெண்களின் கண்ணீர் கருத்து
பாதுகாப்பு பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளிலும் இலங்கை ராணுவம் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது என்றும் இதில் சிறுவர்,சிறுமிகள் எராளமானவர்கள் பலத்த காயம் அடைந்து போதிய மருத்துவ சிகிச்சை இன்றியும் பரிதாபமாக இறந்ததாகவும் இந்த ஆவண படத்தில் தோன்றும் பெண்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்களின் ஒரு எச்சமும் மிச்சமில்லை
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் குண்டு வீச்சில் பலியாகியும்,காயம் அடைந்தும் உள்ளனர். இதில் இறந்தவர்களை இலங்கை அரசு உடனடியாக புதைக்கப்பட்ட தமிழ் மக்களின் எச்சங்கள் எதையும் விட்டுவைக்காமல் அழிக்கப்பட்டதகவும் கூறப்படுகிறது.

கொத்துக் கொத்தாய் குண்டுவீச்சு
முள்ளிவாய்க்கால் பகுதியில் கொடூரமான முறையில் கொத்து ..கொத்தாய் ..ஹெலி காப்டர் மூலம் குண்டுகளை வீசுவதும் மக்கள் செத்தும் ,காயமடைந்து வீழ்வதும் காணமுடிகிறது. இது மட்டுமின்றி சிறுவர்,சிறுமிகள் எராளமானவர்கள் கொலை வெறி தாக்குதலில் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றால் அங்கு மருந்துக்களின்றி காயங்களில் சீல் பிடித்து உயிரிழப்பு ஏற்பட்டதாகவும்,ஆண்களை அழைத்து சென்று என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை,அவர்களை தேடி போகும் பெண்களை மானபங்கம் செய்ததாகவும் அந்த ஆவணபடத்தில் தோன்றும் பெண்கள் கண்ணீருடன் கதறு கின்றனர்.

உலகிலேயே பயங்கரமான பகுதி
இலங்கை அரசு கூறும் பாதுகாப்பு பகுதி தான் உலகிலேயே பயங்கர பகுதி இந்த முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் கடும் கொடுமைகளை சந்தித்து வருவதாகவும்,அங்கிருந்து தப்பி வந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் கண்ணீர் மல்க கதறுகின்றனர்.

கொடூரத்தின் உச்சகட்டம்
கொடூரத்தின் உச்சகட்டமாய் இலங்கை இறுதிகட்ட போரில் இலங்கை ராணுவம் நடந்து கொண்ட விதம் இந்த ஆவன படத்தின் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.ஏற்கனவே உயிரை உறைய வைக்கும் சில ஆவணப்படங்கள் இது வரை வெளிவந்துள்ள நிலையில் சேனல்-4 வெளியிட்ட ஆவணப் படத்தின் உண்மைத் தன்மையால், உலக நாடுகளின் மீதான பார்வை தற்போது இலங்கையின் மீது விழுந்துள்ளது .

இலங்கையின் அடக்குமுறை
இலங்கைஅரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்கள் காணாமல் போவதும், மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் அடக்கப்படுவதும் வாடிக்கையாக நடைபெறும் அந்த நாட்டில், சேனல்-4ன்முதல் ஆவணப்படம் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட போது, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, இலங்கை அரசு செய்த குற்றச்சாட்டுகளை மேலும் மேலும் மறைக்க முற்படுவதால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று தெரிவித்ததையும் நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.
தொடர்ந்து இலங்கையில் தமிழர்கள் மீது திட்ட மிட்டு கொலை வெறி தாக்குதல்களை இலங்கை அரசு நடத்தியுள்ளதுஎன்பதற்கு வலு சேர்க்கும் வண்ணம் இந்த'' மறைக்கப்பட்ட நீதி''ஆவணப்படம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications