தமிழ்நாட்டில் தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? வைகோ கண்டனம்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு பணியார் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில், முதன்மைத் தேர்வைத் தமிழில் எழுதுவதற்குக் கட்டுப்பாடுகள் விதித்ததை ரத்து செய்யுமாறு, மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்து உள்ளோம்.
இந்தநிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமும், தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டு இருந்த முக்கியத்துவத்தைக் குறைத்து இருப்பது வேதனை தருகிறது.
தமிழ்நாடு அரசு பணிகளில் காலி இடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களில் மாற்றம் செய்து அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.
இதன்படி மாற்றி அமைக்கப்பட்டு உள்ள புதிய பாடத்திட்ட முறையில், குருப்-2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, குரூப்-4 தேர்வுக்கான பொதுத் தமிழ் பகுதியில் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத் திட்டத்தில், வங்கி தேர்வு மற்றும் யு.பி.எÞ.சி., தேர்வுகள் போன்று அறிவுக்கூர்மை, சிந்தனைத் திறன் தேர்வுகள், பொது அறிவு மற்றும் கிராம நிர்வாகம் போன்ற பாடங்கள் இடம் பெற்று உள்ளன.
தமிழ் வழியில் படித்த கிராமப்புற மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால், ஆங்கிலப் புலமை மற்றும் பொது அறிவு பெற்று உள்ளவர்கள் மட்டுமே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, தமிழ் மொழியில் கல்வி பயிலாமலேயே பட்டப் படிப்பை முடிக்கக்கூடிய நிலை இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியை ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழியாக ஆக்க வேண்டும், தமிழ்வழிக் கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கும்போது, தமிழ்நாட்டில், தமிழில் படித்தால் வேலை வாய்ப்பு இருக்காது என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் புதிய பாடத்திட்டங்களைப் புகுத்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ் மொழிக்கு உரிய உரிமை மற்றும் முக்கியத்துவத்தைத் தக்க வைக்கவும், தமிழ் மொழியில் பயின்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறவும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் போட்டித் தேர்வுகளில் கொண்டு வந்து உள்ள புதிய பாடத்திட்ட முறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications