இந்திய ஜனநாயகத்துக்கு பாஸ் மார்க் போட்ட கலாம்!
டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் செயல்திறனை மதிப்பிடும்போது 10-க்கு 5 மதிப்பெண்களை தரலாம் என அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார நிபுணத்துவத்துவம் பெற்ற பொருளாதாரம் மற்றும் பிற விசயங்களில் அவர் முடிவுகள் எடுக்கும் விதத்தை நான் மதிக்கிறேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்
முடிவெடுக்கும் திறமையையும் நான் பாராட்டுகிறேன். நான் இருவருடனும் ஜனாதிபதியாக பணிபுரிந்துள்ளேன்.
1947-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை பார்க்கும் போது, ஜனநாயகத்தை நிலைநாட்ட பன்முகத் தன்மையுடைய ஒரு அரசிலமைப்பை நாம் கொண்டுள்ளோம் என்பது தெரிகிறது. இந்தி
ஜனநாயகத்தின் செயல்திறனை மதிப்பிடும்போது 10-க்கு 5 மதிப்பெண்களை தரலாம். பாஸ் மார்க்.
ஒரு ஜனநாயக நாட்டில், ஒவ்வொரு குடிமகனுக்கும் கவுரவத்துட உரிமை உள்ளது. பிறரின் நம்பிக்கையை, கலாச்சாரத்தை புரிந்து கொள்ளும் விசாலமனமுடையதும், வேற்றுமைகளை மதித்து கொண்டாடும் ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications