Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வினோதினி கொலை வழக்கு: 232 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

Vinothini
காரைக்கால்: ஆசிட் வீச்சில் உயிரிழந்த காரைக்கால் வினோதினியை கொலை செய்த குற்றவாளி மீது 232 பக்க குற்றபத்திரிகையை காரைக்கால் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் திருக்கடையூர் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் வினோதினி. இவர் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். இதற்காக காரைக்கால் எம்.எம்.ஜி நகரில் குடியேறினர்.

படிப்பை முடித்த வினோதினி சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை கோட்டுச்சேரி திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் (28) என்ற கட்டிடத் தொழிலாளி ஒருதலையாக காதலித்தார். இதை வினோதினி ஏற்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்த வினோதினி நவம்பர் 14ம் தேதி இரவு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றபோது, சாலையோரம் மறைந்திருந்த சுரேஷ், வினோதினி மீது ஆசிட் வீசி விட்டு ஓடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த வினோதினி இரண்டு கண்களிலும் பார்வை இழந்தார். சென்னை தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 11ம் தேதி இறந்தார்.

ஏற்கனவே ஆசிட் வீசியது தொடர்பாக சுரேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். நேற்று அவர் மீது 232 பக்க குற்றப்பத்திரிகையை காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+