26 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைப்பு: ஜெயலலிதா உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழ்நாட்டில் 26 ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளிகள் இல்லாத கிராமமே இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள், மாநிலத்தின் இதர பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இணையான சீரான கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், பின் தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்பொழுது அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றியங்கள், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் அந்தியூர் ஒன்றியங்கள், திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி மற்றும் வேப்பனஹள்ளி ஒன்றியங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் ஒன்றியம், சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி, பெத்தநாயக்கன் பாளையம், தாரமங்கலம், கொளத்தூர், மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, ஏற்காடு ஆகிய ஒன்றியங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தில் திருநாவலூர், திருவெண்ணைநல்லூர், சங்கராபுரம் (கல்வராயன் மலை), உளுந்தூர்பேட்டை ஒன்றியங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்தரம் ஒன்றியம் என 26 ஒன்றியங்களில், ஒன்றியம் ஒன்றுக்கு ஒரு மாதிரி பள்ளி வீதம் 26 மாதிரி பள்ளிகள் துவக்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

6 முதல் 12 ஆம் வகுப்புகள் கொண்ட பள்ளிகளாக 2013-14 ஆம் கல்வி ஆண்டு முதல் இந்தப் பள்ளிகள் செயல்படும். இந்தப் பள்ளிகளுக்கான சொந்தக் கட்டடம் கட்டும் வரை, இப்பள்ளிகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவிருக்கும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர் பணியிடம் 1, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 7, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 5, கணினி ஆசிரியர் பணியிடம் 1, உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 1, இசை ஆசிரியர் பணியிடம் 1, ஓவிய ஆசிரியர் பணியிடம் 1 என 17 ஆசிரியர் பணியிடங்களும், இளநிலை உதவியாளர் பணியிடம் 1, நூலகர் பணியிடம் 1, ஆய்வக உதவியாளர் பணியிடம் 1, அலுவலக உதவியாளர் பணியிடம் 1, கூட்டுபவர், துப்புரவு பணியாளர் பணியிடம் 1, இரவு காவலாளி பணியிடம் 1, தோட்டக்காரர் பணியிடம் 1 என 7 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+