கணக்கு பரிட்சையில பெயிலாருவோமோ? பிளஸ் 2 மாணவன் தற்கொலை முயற்சி
வாடிப்பட்டி: பிளஸ் 2 கணித தேர்வு கடினமாக இருந்ததால், மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் தேர்வு அறை மாடியில் இருந்து கீழே குதித்து காயமடைந்தார் மாணவன் ஒருவர். இப்போது கால்களில் கட்டுப்போட்டு மருத்துவமனையில் படுத்துக் கிடக்கிறார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே போடி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் நந்தகுமார்(17). இவர் வாடிப் பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கணித பிரிவில் படித்து வருகிறார்.
பிளஸ் 2 கணிதத் தேர்வு வியாழக்கிழமை காலை நடந்தது. வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 2வது மாடியில் உள்ள தேர்வு அறையில் நந்தகுமார் தேர்வு எழுதினார். கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால், விடை எழுத திணறினார். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதோ என அச்சமடைந்தார்.
மனமுடைந்த நந்தகுமா ரால் தொடர்ந்து தேர்வை எழுத முடியவில்லை. திடீரென எழுந்த அவர், தண்ணீர் குடிக்கப் போவதாகச் சொல்லி தேர்வறையை விட்டு வெளியே வந்தார். வேகமாக மாடிக்கு ஏறிச்சென்ற நந்தகுமார், தற்கொலை செய்யும் நோக்கத்தில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் அவரின் கை, கால் மற்றும் இடுப்புப் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். வேதனையில் துடித்த மாணவரின் அலறலை கேட்டு தேர்வறையில் இருந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் ஓடிவந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நந்தகுமார், முதலுதவிக்கு பிறகு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கணக்கு கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது என்றும் மதிப்பெண் குறைந்தால் வீட்டில் திட்டுவார்களே என்று பயந்தே மாடியில் இருந்து குதித்து விட்டதாக தெரிவித்தார் நந்தகுமார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications