விசாரணைக்கு சென்ற எஸ்ஐக்கு சரமாரி அடி- 3 பேர் கைது
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் சேர்மன். இவர் அங்குள்ள கேஸ் ஏஜென்சியில் டிரைவராக உள்ளார். தூத்துக்குடியிலிருந்து லோடு ஆட்டோவில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றி சென்று ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கவர்ணகிரியில் சேர்மன் வினியோகம் செய்த போது, அதே பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் சூசைப்பிள்ளை மகன் அய்யனார் என்பவர் சேர்மனிடம், ‘ எங்களுக்கு சிலிண்டர் வந்துள்ளதா 'என கேட்டுள்ளார். அதற்கு அவர் வரவில்லை என்று கூறவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அய்யனார் சேர்மனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புகாரின் பேரில் ஓட்டபிடாரம் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், போலீஸ்காரர் தாமோதரன் ஆகியோர் கவர்ணகிரி சென்று அய்யனாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது எஸ்ஐக்கும், அய்யனாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்ஐ அய்யனாரை பிடித்து ஜீப்பில் ஏற்ற முயன்றார். இதை பார்த்த அவரது உறவினர்கள் ஐய்யனாரை ஜீப்பில் ஏற்ற விடாமல் தடுத்தனர்.
மேலும் எஸ்ஐ -யை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கனகராஜ் ஓட்டப்பிடாரம் போலீசி்ல் புகார் செய்தார். அதன் பேரில் ஐய்யனார், அவரது உறவினர் அஞ்சுராஜன், அவரது மகன்கள் விஜய், வில்லியம், விஜயராஜ், சாமியா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, அஞ்சுராஜன், வில்லியம், சாமியா ஆகியோரை கைது செய்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications