கொலைகார மாலுமிகள் விவகாரம்- இத்தாலி தூதரை கைது செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிடும்?

கேரளாவில் தங்கி தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் அரபிக் கடற்பரப்பில் மீன்பிடித்த போது இத்தாலிய மாலுமிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் 2 இத்தாலிய மாலுமிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக சொந்த நாடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குப் பின்னர் இந்தியாவுக்கு வந்த இருவரும் அண்மையில் உச்சநீதிமன்ற அனுமதியுடன் தேர்தலில் வாக்களிக்க இத்தாலி சென்றனர்.
ஆனால் அங்கு சென்ற பின்னர் இத்தாலி அரசு இருவரையும் இந்தியாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இதனால் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இத்தாலியின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம் இத்தாலி தூதரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறிய இத்தாலி தூதர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளது என்று மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகிறது. எனவே உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறிய இத்தாலி தூதர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளது. அனேகமாக இத்தாலி தூதரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications