மாணவர்கள் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை- மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகம் முன்பு போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

TN students will lay siege to Raj Bhavan on Lankan Tamils
சென்னை: தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தன்னெழுச்சியாக எழுந்த மாணவர் போராட்டம் தற்போது தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பாக உருவாகியிருக்கிறது. சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் 7-வது நாளாக நீடித்திருக்கிறது.

சென்னை நந்தனம் விருத்தாசலம் உள்ளிட்ட சில இடங்களில் மாணவர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாளை 18-ந் தேதியன்று சென்னையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது.

மேலும் மாவட்டங்களில் அனைத்து மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 20-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்ட நடைபெற இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+