For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் அதிகரிக்கும் கருச்சிதைவுகள் : ஒரு குழந்தை திட்டத்தின் விளைவு

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் ஒரு குழந்தை திட்டத்தின் விளைவாக கருச்சிதைவுகள் அதிகரித்து வருவதாக, அதிர்ச்சி தகவலை சீன சுகாதாரத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகையில் உலகிலேயே முதலிடத்தில் உள்ள சீனா, மக்கள்தொகைப்பெருக்கத்தை கட்டுப்படுத்த , ‘ஒரு குழந்தை திட்டத்தை' 40 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. இத்திட்டம் சீனாவில் உள்ள பெரும்பான்மையானோரால் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் பலனாக, நாட்டில் பொருளாதார வளர்ச்சியும், உணவு தேவையும் சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னேற்றமுள்ள அதே வேளையில், இத்திட்டத்தால் சில விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்பட்டுள்ளனவாம். அதாவது, குடும்பகட்டுப்பாடு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், ஆண்டுக்கு சுமார் ஒன்றரை கோடி பேர் கருச்சிதைவு செய்கிறார்களாம். அதாவது, ஒரு நிமிடத்திற்கு 25 கருச்சிதைவுகள் நடைபெறுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது, வாலு போயி கத்தி வந்த கதையாக அல்லவா இருக்குது...

English summary
More than half a billion birth control procedures, including at least 336 million abortions, have been performed in the name of the one-child policy, China’s Health Ministry has revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X