சங்கடம் தரும் சமூக வலைத்தளங்கள்... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இன்னைக்கு பரிட்சை சூப்பர்ல... பக்கத்து வீட்டு பாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க... பைக் ரிப்பேர் ஆயிருச்சு... இதெல்லாம் என்ன என்று பார்க்கிறீர்களா? சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் போடப்படும் ஸ்டேட்டஸ்கள்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்கி ஆணியே புடுங்கவேண்டாம்....என்பது வரை எத்தனையோ ஃபேஸ்புக் பக்கங்கள் இணைய உலா வருகின்றன. சந்தோசம் தரக்கூடியவை என்று சமூக வலைத்தளங்களில் இணைந்தவர்கள் கடைசியில் சங்கடத்திற்கு ஆளாகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மன அமைதிக்காக என்று இணைந்த இளைஞர்கள் கடைசியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனராம். குறிப்பாக பெண்களை விட ஆண்கள்தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

லண்டன் நிறுவனம் ஆய்வு

லண்டன் நிறுவனம் ஆய்வு

லண்டனில் இயங்கும் நோ தி நெட் என்ற நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. 19 வயதுடைய இளைஞர்களை மனதளவில் காயப்படுத்துவதில் பேஸ்புக் முதலிடம் வகிப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்தது.

ஃபேஸ்புக் நம்பர் 1

ஃபேஸ்புக் நம்பர் 1

இளைஞர்களுக்கு மனஅழுத்தம் தருவதில் பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது. 87 சதவீதம் பேர் பேஸ்புக்கினால் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

டுவிட்டர் 2 ம் இடம்

டுவிட்டர் 2 ம் இடம்

டுவிட்டர் தளத்தினால் 19 சதவீதம், பிளாக் பெர்ரியால் (பிபிஎம்) 13 சதவீதம், ஆஸ்க் எப்.எம். மூலம் 9 சதவீதம, பிபோ மூலம் 8 சதவீதம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 4 சதவீதம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்களே அதிகம் பாதிப்பு

ஆண்களே அதிகம் பாதிப்பு

இதில் பெண்களை விட ஆண்களே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரச்சினைக்கு உள்ளாகும் இளசுகள் இதனை தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பது இல்லை.

தற்கொலைக்கு ஆளாகும் அவலம்

தற்கொலைக்கு ஆளாகும் அவலம்

பதின் பருவத்தின் கடைசி கட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் தனியே இப்பிரச்சினைகளை சமாளிக்க நினைத்து, முடியாமல் தற்கொலை நிலைக்குக் கூட தள்ளப்படுகின்றனர். இது தவறான வழிமுறையாகும் என்று இந்த ஆய்வு நிறுவனத்தின் மனோதத்துவ நிபுணர் ஆர்தர் காசிடி தெரிவிக்கிறார்.

புகார் செய்யலாமே

புகார் செய்யலாமே

மன அழுத்தம் தரும் செய்கைகள் குறித்து புகார் செய்ய வலைத்தளங்கள் வழிமுறைகள் வைத்திருக்கும் போதும், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் செய்ய முன்வருவதில்லை. பெரியதாக எந்த மாற்றமும் நடந்துவிடாது என்ற எண்ணத்துடன் மவுனமாக இருந்து விடுகிறார்கள்.

பெற்றோர் அல்லது ஆசிரியர்கள்

பெற்றோர் அல்லது ஆசிரியர்கள்

மிகச் சிலர் தான் இப்பிரச்சினைகள் குறித்து தங்கள் பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ பகிர்ந்து கொள்கின்றனர். இது குறித்து அந்த பேஸ்புக் வலைத்தளத்தின் நினைவுப் பக்கங்களில் 21 சதவீத இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

செல்போனும் ஃபேஸ்புக்கும்

செல்போனும் ஃபேஸ்புக்கும்

பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்லும் பதின் பருவப் பிள்ளைகள் இருந்தால் அவர்களை கவனமாக கையாளுவது அவசியம். இல்லாவிட்டால் அவர்கள் செல்போனிலோ, சமூக வலைத்தளங்களிலோ தொலைந்து போவார்கள்.

பெற்றோர்கள் கண்காணிக்கலாம்

பெற்றோர்கள் கண்காணிக்கலாம்

பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்களின் பிள்ளைகள் கணினியிலும் சமூக வலைத்தளங்களிலுமே மூழ்கியுள்ளனர் என்று வேதனைப் படுகின்றனர் என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்கு அளிக்கிறது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

நண்பர்களாக இணைந்து கொள்ளுங்கள்

நண்பர்களாக இணைந்து கொள்ளுங்கள்

உங்கள் பதின் பருவ குழந்தைகள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களை மேற்பார்வையிட மிகவும் சுலபமான வழி, அவர்களின் நண்பர்களில் ஒருவராக இணைந்து கொண்டு, அவர்களின் தொடர்பு மின்னஞ்சல் பகுதியில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்து, அவர்களுக்கு வரும் தகவல்கள் உங்களுக்கு வரும்படியாக செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் எதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+