மத்திய பிரதேசத்தில் 60 வயது மாமியாரை குடிபோதையில் கற்பழித்த மருமகன்கள்
Subscribe to Oneindia Tamil
சத்தர்பூர்: மத்திய பிரதேசத்தில் 60 வயது பெண்ணை அவரது மருமகன்களே கற்பழித்துள்ள கொடூரம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள குவாரா கிராமத்தில் ஒரு கொடூரம் நடந்துள்ளது. அந்த கிராமத்தில் வசிக்கும் 60 வயது பெண் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவரது மருமகன்கள் சந்தோஷ் பசோத்(40) மற்றும் மஞ்சன் பசோத்(29) ஆகியோரால் குடிபோதையில் கற்பழிக்கப்பட்டார்.
இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்போரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் சந்தோஷ் மற்றும் மஞ்சனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications