ரூ.53,000 ஹோண்டா ஆக்டிவாவுக்கு ரூ.7 லட்சம் கொடுத்து ஏகே-47 பதிவு எண் பெற்ற பஞ்சாப் விவசாயி

Subscribe to Oneindia Tamil

ஹோஷியார்பூர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ரூ. 7 லட்சம் கொடுத்து ஏகே 47 என்ற எண்ணை வாங்கியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் கடோவால் கிரமாத்தைச் சேர்ந்தவர் குல்பிர் சிங்(38). விவசாயி. ஹோஷியார்பூர் மாவட்டத்தில் வாகன பதிவு எண் குறித்த ஏலம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களில் 16 பேருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. எவ்வளவு பணம் கொடுத்தாவது தங்களுக்கு பிடித்த பதிவு எண்ணை வாங்குவது என்று அவர்கள் போட்டா போட்டி போட்டனர்.

அதில் 5 பேர் ஒரு குறிப்பிட்ட எண்ணைப் பெற ரூ. 5 லட்சம் வரை தர தயாராக இருந்தனர். இறுதியில் குல்பிர் சிங் ரூ.53,000 மதிப்புள்ள தன்னுடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு பிபி 07 ஏகே-47 என்ற எண்ணை ரூ.7 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

எவ்வளவு பணம் கொடுத்தாவது இந்த எண்ணை வாங்க வேண்டும் என்று இத்தாலியில் இருக்கும் எனது சகோதரர் அமன்ப்ரீத் சிங் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் எனது உறவினர் தில்ஷேர் சிங் தாலிவால்(20) என்னிடம் தெரிவித்திருந்தனர். இது மிகவும் பிரபலமான எண். இதை பெற கடும் போட்டி இருக்கும் என்று தெரியும். இதற்கு முன்பு எங்கள் வாகனங்களுக்கு 47 என்ற எண் கிடைத்து ஆனால் ஏகே-47 இல்லை. அதனால் இந்த எண்ணை எவ்வளவு பணம் கொடுத்தாவது வாங்கி விட வேண்டும் என்று நினைத்தோம்.

ஏலத்தை வென்ற பிறகு குல்பிர் சிங் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் சேர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அவருடைய ஸ்கோடா லாரா காரின் எண் பிபி-38 0001. ஒரு பார்ச்சூனர் கார் வாங்கி ஏகே 47 என்ற எண்ணை அதற்கு மாற்றப்போவதாக குல்பிர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+