மன்மோகன், சோனியாவுடன் அழகிரி தனியாக அப்படி என்ன தான் பேசினார்? பரபரப்பு தகவல்கள்

மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியது. இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 5 பேர் நேற்று பிரமதர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். அதில் மு.க. அழகிரி மட்டும் பிரதமரை தனியாக சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
அப்போது அழகிரியை வரவேற்ற மன்மோகன் சிங் திமுகவின் முடிவு தனக்கு ஆச்சரியத்தை அளித்ததாக தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அங்கு வருவதால் சற்று நேரம் காத்திருக்குமாறு அவர் அழகிரியை கேட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் சோனியா அங்கு வந்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர்.
2004ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமரான போது திமுக தலைவர் கருணாநிதி தான் அவரை முதன் முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதை நினைவு கூர்ந்த பிரதமர் இந்நாள் வரை ஆதரவு அளித்து வந்ததற்கு அழகிரியிடம் நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து சோனியா அழகிரியிடம் மனம் திறந்து பேசியுள்ளார். கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுக்கும் முன்பு உங்கள் தந்தை என்னிடமோ அல்லது பிரதமரிடமோ பேசியிருக்கலாம். அவ்வாறு செய்யாதது வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சோனியா பேச்சைக் கேட்ட அழகிரி நெகிழ்ந்து போய்விட்டாராம். ஆனால் கட்சி மேலிடம் எடுத்த முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அழகிரி தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர் பிரதமர் மற்றும் சோனியாவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications