இலங்கை விவகாரம்- தமிழக எம்.பிக்கள் ஆவேசம்- பார்லி. முடங்கியது!

இன்று காலை லோக்சபா கூடியதும் திமுக, அதிமுக எம்.பிக்கள் எழுந்து இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராத மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். அமெரிக்காவின் தீர்மானத்தை வலுவானதாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றும் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதேபோல் தனித் தெலுங்கானா மாநிலம் கோரி ஆந்திர மாநில எம்.பிக்களும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபையை பகல் 12 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடிய போதும் அமளி தொடரவே நாள் முழுவதும் சபையை ஒத்தி வைப்பதாக அவர் அறிவித்தார்.
திமுக பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி ராஜ்யசபாவில் திமுக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். அதிமுகவினர், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட படத்துடனான பதாகைகளை ஏந்திய படி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. மீண்டும் சபை கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் ராஜ்யசபா பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு அவை கூடிய போதும் இலங்கை விவகாரத்தில் 'நீதி கோரி" தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் ராஜ்யசபாவும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications