காதலுடைந்த துக்கத்தில் காதலன் வீட்டு முன்பு விஷம் குடித்த காதலி சாவு

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்த காதலன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து, பெற்றோருடன் சென்றதால் மனமுடைந்து விஷம் குடித்த காதலி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் கொத்தறி காமராஜர் தெருவைச் சேர்ந்த மணிமுத்து மகள் சிவகாமி (30). காரைக்குடி ஓ.திருவயலைச் சேர்ந்த முகமது ஷெரீப் மகன் ஷேக்முகமது (27). இருவருக்கும் சமையல் வேலைக்குச் சென்ற இடத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

திருமணம் செய்யாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சிவகாமியை பிரிந்த ஷேக் முகமது பெற்றோருடன் வசிக்க தொடங்கினார். சிவகாமி தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

காதலன் பிரிவால் மனமுடைந்து காணப்பட்ட சிவகாமி நேற்று காலை ஷேக்முகமது வீட்டுக்குச் சென்று ஷேக் முகமது மற்றும் அவரது பெற்றோரிடம் பேசினார். ஆனால் சமரசம் ஏற்படாததால் மனமுடைந்த சிவகாமி, ஷேக்முகமதுவின் வீட்டு வாசலிலேயே விஷம் குடித்தார்.

மயக்கமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிவகாமி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து குன்றக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவண போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+