சேலம் திமுகவில் ஓங்கும் மு.க.ஸ்டாலின் கை! உருவாக்கப்படுகிறார் வீரபாண்டியார் வாரிசு பிரபு!!

திமுகவில் அண்ணா காலத்து அரசியல் தலைவர்களில் ஒருவர் என்ற 'சீனியாரிட்டி' அடைமொழியோடு வலம் வந்தவர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம். திமுகவில் ஸ்டாலின் அணி, அழகிரி அணி என எதிலும் இல்லாமல் கருணாநிதி அணியில் இருந்தவர்களில் முக்கியமானவர் அவர். ஆனால் அவரது தமது கடைசி காலத்தில் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மு.க. அழகிரி அணியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் கட்சித் தலைமையோடு பகிரங்கமாகவே மோதினார்.
மு.க. அழகிரியின் மதுரை மாவட்ட தளகர்த்தகர்கள் பலரும் ஸ்டாலின் பக்கம் சாய்ந்த போதும் கூட சேலத்தை ஸ்டாலினால் அசைக்க முடியாமல் இருந்தது. வீரபாண்டி ஆறுமுகம் மறைந்த பிறகு மாவட்ட செயலர் பதவியை தமக்கே தருவர் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் அவரது மகன் வீரபாண்டி ராஜா. ஆனால் சேலம் மாவட்ட பொறுப்பாளராக எஸ்.ஆர். சிவலிங்கம் அறிவிக்கப்பட்டார். இதில் ராஜா தரப்பு சலசலப்பு காண்பித்துக் கொண்டிருந்து. வீரபாண்டி ராஜாவின் 'அடாவடி' தொடர கடிவாளம் போடத் தொடங்கினார் ஸ்டாலின்.
இந்த கடிவாளக் காட்சிகளில் ஒன்றுதான் வீரபாண்டியாரின் இளைய மகன் பிரபு. சென்னையில் இருக்கும் பிரபு மு.க. ஸ்டாலினை அடிக்கடி சந்தித்துப் பேச அவர் முற்று முழுதாக மு.க. ஸ்டாலின் அணியாகவே மாறிப் போனார். இந்த அணி மாற்றத்துக்கான 'பிரகடன அறிவிப்பு' ஸ்டாலின் பிறந்த நாள் விழாக்களில் அரங்கேற்றமாகியிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்த நாள் விழாக்களில் பிரபுதான் விவிஐபி. அப்புறம் என்ன? தளபதி சிக்னல் பிரபுவுக்கு கிடைத்துவிட்ட என்பதால் அப்படியே ஸ்டாலின் அணியினர் பிரபுவுக்கு நெருக்கம் காட்டுகின்றனர். இதில் உச்சமாக சொல்லப்படுவது வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷும் கூட பிரபு பக்கம் சாய்ந்துவிட்டாராம்! இதனால் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தில் பிரிவினை வேர்விடத் தொடங்கியிருக்கிறதாம்!
சேலத்து சிங்கம் என்று சொல்லப்படும் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டிலிருந்து ஸ்டாலின் ஆதரவு அணி உதயமாகியிருப்பதால் ஏக குஷியில் இருக்கிறதாம் சேலம் திமுக!
முக அழகிரி திமுக?:
இதனிடையே காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டுகிற மு.க. அழகிரி திமுகவில் ஒரு காங்கிரஸ் ஆதரவு அணியை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார் என்று குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ் பதிவு செய்திருக்கிறது. அவருக்கு 11 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதாகவும் அந்த இதழ் தெரிவித்திருக்கிறது.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்











Click it and Unblock the Notifications