உ.பி.யில் 14 வயது சிறுமியை கற்பழித்து கழுத்தை நெறித்து கொல்ல முயன்ற 3 பேர்
Subscribe to Oneindia Tamil
காசியாபாத்: உத்தர பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கற்பழித்து அவரை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிந்தன் விஹார் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி இன்று அதிகாலை தனது வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷேர் முகமது மற்றும் அவருடைய உறவினர்கள் சதாப் மற்றும் சாஹப் ஆகியோர் சேர்ந்து சிறுமியை கற்பழித்துள்ளனர்.
இதில் ஷேர் முகமது கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது உறவினர்கள் தலைமறைவாகிவிட்டனர். சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை அந்த 3 பேரும் சேர்ந்து கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான 2 பேரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications