இந்தியருக்கான விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தியது ஆஸ்திரேலியா
Subscribe to Oneindia Tamil
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளை மிகவும் எளிமைப்படுத்தியிருக்கிறது அந்நாட்டு அரசு.
ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் ஆஸ்திரேலியா சென்று திரும்புகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியர்கள் விசா பெற மொத்தம் 9 பிரிவுகள் விசா விண்ணப்பத்தில் இருந்தது. இது தற்போது 4 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மார்ச் 25-ந் தேதி முதல் புதிய விண்ணப்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இப்புதிய விண்ணப்பம் மூலமான விசாவில் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் உறவினர்களிடம் நிதி பெறுதல் ஆகியவை அடங்கும். மேலும் வேலை காரணமாக குறிப்பிட்ட காலம் அங்கு தங்க, மருத்துவ காரணங்களுக்காக செல்வோர் 12 மாதகாலம் தங்கவும் இப் புதிய விசாக்கள் வரைமுறை படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications